நீலகிரியில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து ஆய்வு

நீலகிரி : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியுடன் உள்ளதாகவும், தவிர்க முடியாத சில பொருட்களை அடைத்து விற்க மாற்று ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

நீலகிரி : தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியுடன் உள்ளதாகவும், தவிர்க முடியாத சில பொருட்களை அடைத்து விற்க மாற்று ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னுார், கூடலுார், நெல்லியாளம் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் நான்கு ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 35 ஊராட்சிபகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியுடன் உள்ளது. 

அவ்வப்போது அதிகாரிகளின் சோதனையின்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பட்டியலில் இல்லாத பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். இதனால், சில்லறை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அல்லது கடைகளில்சோதனை நடத்தும்போது, பேக் செய்யப்பட்ட பொருட்களும் சட்ட விரோதமானது என்றுகூறி, அதனை பறிமுதல் செய்கின்றனர். 

அதே வேளையில், முன்னணி நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும், மக்காததன்மைக் கொண்ட பைகளில் உணவு பொருட்களை அடைத்து .கொடுப்பதைத் தடுப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நூறு சதவீத இலக்கை அடைவது சிரமமாக உள்ளது. 

நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற ஊட்டி வர்க்கி, சுவையான தேயிலை, உள்ளிட்டவற்றை அடைத்து விற்பதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும்,குளிருக்கு நமத்து போகும் பொரி ,கடலை உள்ளிட்ட உணவுப் பொருட்களை அடைத்து விற்கவும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. 



இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்ட போது அலுமினியம் பூசப்பட்ட பேக்கிங் கவர்கள் மட்டும் பயன்படுத்தலாம். மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்து பல நிறுவனங்களின் உற்பத்திகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...