விஸ்வாசம் முதல் காட்சியை பார்க்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை கொளுத்திய மகன்

வேலூர் : இன்று வெளியாகியுள்ள நடிகர் அஜித்துன் விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க பணம் தர மறுத்ததால் மகனே தந்தையை எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் : இன்று வெளியாகியுள்ள நடிகர் அஜித்துன் விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்க்க பணம் தர மறுத்ததால் மகனே தந்தையை எரித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கழிஞ்சூரை சேர்ந்தவர் பிரசாந்த் (எ) அஜித்குமார் (20). 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கட்டட வேலை செய்து வருகிறார். இவரது தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. பிரசாந்த் தீவிர அஜித் ரசிகர். இந்நிலையில், விஸ்வாசம் வெளியாவதற்கு முதல் நாளான நேற்று இரவு தன் தந்தையிடம் விஸ்வாசம் படம் பார்ப்பதற்கு டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார்.

பீடி சுற்றும் தொழிலாளியான பாண்டியன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரப்பட்ட பிரசாந்த் அதிகாலை தந்தை பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டார் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

இதனிடையே, பாண்டியன் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது அவர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவத்தின் போது பிரசாந்த் குடித்திருந்ததாக போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து, பிரசாந்த் போலீசார் பிடியில் வைக்கப்பட்டுள்ளார். 

மேலும், வேலூர் மாவட்டம், அலங்கார் திரையரங்கில் நடந்த அதிகாலை விஸ்வாசம் படக் காட்சியில் ஏற்பட்ட நெரிசல் தகராறில் பிரதாப் என்ற ஒரு ரசிகர் இரண்டு சக ரசிகர்களை கத்தியால் குத்தியுள்ளார். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...