கோவை மத்திய சிறைச்சாலை ஆயுள் தண்டனைக் கைதியின் மரணத்தில் சந்தேகம்

கோவை : மத்திய சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சிறைவாசியின் தலையில் காயங்கள் இருப்பது அவருடைய மரணத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


கோவை : மத்திய சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சிறைவாசியின் தலையில் காயங்கள் இருப்பது அவருடைய மரணத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (56). இவர் தனது மகனைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக கோவை மத்திய சிறையில் உள்ளார். இவர் நேற்று அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். 



இதையடுத்து, இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இறந்த ராமசாமியின் தலை மற்றும் உடலில் காயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இவரது உடலை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. ஆகையால், உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது சிறை கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாரா என சந்தேகம் நிலவி வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...