கோவை : கோவையில் மின்னியல் மற்றும் தொழில் மின்னணுவியல் தொடர்பான எலக்ட்ரோடெக் கண்காட்சி ஜனவரி மாதம் 24 முதல் 27 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை, கொடிசியா சார்பில் மின்னியல் மற்றும் தொழில் மின்னணுவியல் தொடர்பான எலக்ட்ரோடெக்- 2019 கண்காட்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவ்வமைப்பின் தலைவர் ராமமூர்த்தி பேசினார்.
அவர் கூறியதாவது :- வருகின்ற ஜனவரி 24 -ம் தேதி முதல் 27 -ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. மின்நிறுவல் பொறியாளர்கள் நலசங்கம், கோயமுத்தூர் மாவட்ட மின் வர்த்தகர்கள் சங்கம், கேரளா மின்சார வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகிறது.
இதில், ஆந்திரா, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடக, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். வர்த்தக பார்வையாளர்கள் சுமார் 20,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியை ஹீரோ எலக்ட்ரிக் குரூப்பின் டெசால்வ் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் இணை நிறுவனர் மற்றும் தலைவர் வீரப்பன் தொடங்கி வைப்பார்.
கடந்த முறை ரூ.130 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்தாண்டு ரூ.300 கோடி வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். புதுப்பித்தக்க ஆற்றல் துறை மற்றும் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு வளாகம் அமைக்கப்படவுள்ளது. ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீர் உள்ளிட்டவை தொடர்பான கருத்தரங்கள் நடைபெற உள்ளது. மேலும், கழிவுநீர் மேலாண்மை குறித்து சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கொடிசியா அமைப்பின் கௌரவ துணை செயலாளர் கார்த்திகேயன், எலக்ட்ரோடெக் கண்காட்சியின் தலைவர் முத்துகுமார், துணைத்தலைவர் தங்கசாமி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.