சபரிமலை விவகாரம் : கோவை இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை ரகசியமாகக் கண்காணிக்கும் உளவுத்துறை

கோவை : சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக எழும் பிரச்சனைகளை முன்னரே தடுப்பதற்காக உளவுத்துறையினர் இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோவை : சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக எழும் பிரச்சனைகளை முன்னரே தடுப்பதற்காக உளவுத்துறையினர் இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோலவே, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் கம்யூனிஸ்ட் கட்சியைக் கண்டித்தும், கேரள அரசைக் கண்டித்தும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சிங்காநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி கம்பங்கள் மற்றும் கொடி சேதப்படுத்தப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவை முகநூலில் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பிரச்சனைகள் நடப்பதற்கு முன்பாகவே தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே, கோவை உள்ளிட்ட தமிழக - கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில் சோதனைச்சாவடிகளில் போலீசார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்து இயக்க நிர்வாகிகளின் செயல்பாடுகளை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...