திருப்பூர் : கோடாங்கிபாளையத்தில் பொங்கல் பரிசுத்தொகையை வாங்க மணிக்கணக்காக காத்துக்கிடப்பதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : கோடாங்கிபாளையத்தில் பொங்கல் பரிசுத்தொகையை வாங்க மணிக்கணக்காக காத்துக்கிடப்பதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுடன் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் அனைத்து பகுதிகளிலுள்ள நியாய விலைகடைகளிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருப்பூர், பல்லடம் அருகேயுள்ள கோடாங்கிபாளையத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், பொங்கல் தொகை கொடுக்க தொடங்கிய அன்று, 100 பேருக்கு கொடுத்தனர். மறுநாள் வந்து கடையை திறந்தவர்கள் இருவருக்கு வழங்கிய பின் சாப்பிடச் சென்றுவிட்டனர். அதன் பிறகு வரவே இல்லை என அப்பகுதி பெண் ஒருவர் கூறினார்.
இதையடுத்து, இன்றும் மதியம் வரை நியாய விலை கடையை திறக்கப்படும் எனக் கூறியதை நம்பி கூலி வேலைக்கு செல்லும் அப்பகுதி மக்கள் வேலைக்கு செல்லாமல் காத்திருந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் வராததால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தில் ஈடுபடவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பணம் மற்றும் பரிசு பொருட்கள் தற்போது வரை வரவில்லை என்று கூறினர்