திருப்பூர் : திருப்பூரில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தப்பட்டதால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று கூட்டுறவு அங்காடிகளில் பணம் இல்லை என பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தப்பட்டது. ஒரு சிலருக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால், மீதம் உள்ள பெரும்பாலானோர் தங்களை ஏமாற்றுவதாகக் கூறி குளத்துப்புதூர் பகுதியில் பொதுமக்கள் மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதே போலவே, ஆண்டிபாளையம் பகுதியிலும் பொங்கல் பரிசு விநியோகிக்கப்படவில்லை என ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கே.வி.ஆர் நகரில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் போலவே, நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், பொதுமக்களைச் சமாதானம் செய்யப் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து, கூட்டுறவு அங்காடிகளின் வங்கி கணக்குகளில் நிலுவை தொகை செலுத்தப்பட்டதால் மீண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.