கோவை : காந்திபுரம் பகுதியில் பத்திர பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கையும் களவுமாக அகப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : காந்திபுரம் பகுதியில் பத்திர பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் கையும் களவுமாக அகப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய். இவரது மகன் கோபால் (29). இவர் இறந்து சில மாதங்களான நிலையில், விஜய் தன் மகன் கோபால் பெயரில் இருந்த வீட்டு பத்திரத்தை தனது பெயரில் மாற்றம் செய்ய குடிசை மாற்று வாரியத்தை அணுகியுள்ளார்.
இந்நிலையில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் இருவர் பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.3000 வீதம் ரூ.6000 லஞ்சமாக கேட்டுள்ளனர். இதனையடுத்து, விஜய் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜயிடம் கொடுத்து அதிகாரிகளிடம் தரச் சொல்லியுள்ளனர்.
இதனையடுத்து, குடிசை மாற்று வாரிய அலுவலக அதிகாரிகள் மோகன், தண்டபாணி ஆகியோரிடம் ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், வீட்டுவசதி வாரியத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இன்னும் பல மர்மங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.