கேரளா : சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மஞ்சு என்ற 35 வயது பெண், வயதானவர் போல் தோற்றத்தை மாற்றிக்கொண்டு சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இரண்டு பெண்களை தரிசனம் செய்ய வைத்து, கோவில் ஐதீகத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தகர்த்தார். மகர விளக்கு பூஜைக்கு முன்பு, மேலும் சில பெண்களை தரிசனம் செய்ய வைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில், மகர விளக்குக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஒரு பெண் சாமி தரிசனம் செய்ததாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கொல்லம் மாவட்டம் சாத்தனூரைச் சேர்ந்த மஞ்சு (35) என்பவர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்ததாக கேரள செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தலைமுடிக்கு வெள்ளை 'டை' அடித்து, மாறுவேடமணிந்து அவர் சாமி தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மீண்டும் சபரிமலையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.