நீலகிரி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உதகையில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள் தரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழர்களால் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும், இலவச வேட்டி மற்றும் சேலைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, உதகை மேல் தலையாட்டு மந்து பகுதியில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலைகள் வந்து இறங்கியுள்ளது. பயனாளிகளுக்கு வழங்கப்படும் இந்த வேட்டி மற்றும் சேலைகள் கிழிந்தும், மக்கிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.