நீலகிரி : குன்னூர் வட்டம் பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியினர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட்திவ்யா வழங்கினார்.

இம்மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி உதவித்தொகை 9 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணையையும், 31 பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.