வரும் 10-ம் தேதி கோவை குளங்களை மறுசீரமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு

கோவை : வாலாங்குளம், பெரியகுளம் உள்பட 3 குளங்களை மறுசீரமைப்பதற்கான டெண்டர் வரும் 10-ம் தேதி நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை : வாலாங்குளம், பெரியகுளம் உள்பட 3 குளங்களை மறுசீரமைப்பதற்கான டெண்டர் வரும் 10-ம் தேதி நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் உள்ள உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம், செல்வசிந்தாமணி, சிங்காநல்லூர்குளம், நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்தது. அதோடு, இந்தக் குளங்களைச் சுற்றிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பூங்காக்கள் மேம்படுத்துதல், நடைபாதை போன்ற திட்டப் பணிகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முதற்கட்டமாக, வாலாங்குளம், பெரியகுளம் மற்றும் செல்வசிந்தமாணி குளம் உள்ளிட்ட 3 குளங்களை மறுசீரமைக்க கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, வரும் 10-ம் தேதி டெண்டர் நடத்தப்படுகிறது. ரூ. 161.5 கோடியில், கரைகளைப் பலப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைத்தல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...