கோவை : திருச்சி, விசாகப்பட்டினம் உள்பட 16 விமான நிலையங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. காபி குடிக்க பிளாஸ்டிக் கப்பும், உணவு உண்ணுவதற்கு பிளாஸ்டிக் ஸ்பூனும், இளநீர் சாப்பிடுவதற்கு கூட ஸ்டிரா (straws) என சிறு,சிறு விஷயங்களில் தொடங்கி, பெரிய பெரிய விழாக்கள் வரையிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு, நமது வாழ்க்கையில் ஒன்றியே பயணிக்கிறது. இந்தப் பிளாஸ்டிக் பயன்பாட்டினால், நமக்கான வேலைகள் எளிதாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்திய விமானநிலைய அதிகாரச்சபை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, நாட்டில் உள்ள 16 விமானநிலையங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை அந்தந்த விமான நிலையங்களின் இயக்குநர்களுக்குக் கடந்த 4-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி, இந்தூர், போபால், அகமதாபாத், புவனேஸ்வர், திருப்பதி, விஜயவாடா, டேராடூன், சண்டிகர், வதோதரா, மதுரை, ராய்பூர், விசாகப்பட்டினம், புனே, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய விமானநிலையங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய விமானநிலைய அதிகாரச்சபையின் செய்தித் தொடர்பாளர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "அனைத்து விமான நிலையங்களிலும் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த இந்திய விமானநிலைய அதிகாரச்சபை முயற்சி செய்து வருகிறது. எங்களது முக்கிய நோக்கம், சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, மாற்றுப் பொருட்களை பயன்படுத்தச் செய்வதே ஆகும். ஆகவே, குப்பைத் தொட்டிகளில் வைக்கப்படும் பைகள் கூட, பிளாஸ்டிக் மாற்றுப் பொருளைத் தான் பயன்படுத்துகிறோம். மேலும், விமான நிலைய வளாகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் இயந்திரங்களைப் பொருத்தியுள்ளோம்," என்றார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையிலான இந்திய விமானநிலைய அதிகாரச்சபையின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.