கோவை : 'காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை' எனும் இணையவழி சேவை தமிழக காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை என்ற ஒரு புதிய இணையவழி சேவையை, தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற ஆன்லைன் வழியாக தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாள்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த சேவையை தனிநபர் பயன்படுத்தினால், ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.500, தனியார் நிறுவனங்களாக இருந்தால் ஒரு விண்ணப்பத்துக்கு ரூ.1,000 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைனில் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி இந்தக் கட்டணத் தொகையைச் செலுத்தலாம்.
இந்த சேவையின்படி, தகவல் சரிபார்க்கப்பட வேண்டிய நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். இச்சேவையின் மூலம் தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாள்களுக்குள் காவல் முன்நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும்.

பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் இதற்காக காவல் நிலையத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை.பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள கி.யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தும் அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள சரிபார்ப்பு என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருப்பின், மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. இப்புதிய இணைய வழி சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.