வெள்ளை நிற ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கத் தடை : நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்

கோவை : பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழக்கமாக வழங்கப்படும் அரசி, கரும்பு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் உடன், ரூ.1000 பரிசாக அளிக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று (9 -ம் தேதி) முதல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் குடும்ப அட்டைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

அனைத்து ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசாக பணம் கொடுக்க தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் கோவை நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, மற்றும் வரவேற்கத்தக்கது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க நிதி இல்லாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவது சரியல்ல என்பதால் வழக்கு தொடரப்பட்டது.

வசதி உள்ளவர்களுக்கும் ரூ.1000 வழங்குவது என்பது ஏற்புடையது அல்ல. தமிழக அரசு கடன்களை அதிகரிப்பதை விடுத்து கடன் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பரிசு விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பது தங்கள் நோக்கமல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். 

எனவே, நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். நான் அரசியல் கட்சியில் இருந்தாலும், அதற்கும் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...