உதகையில் 123 -வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

நீலகிரி : உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 123 -வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 230 வகையில் சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி இன்று தொடங்கியது.

நீலகிரி : உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 123 -வது மலர் கண்காட்சியை முன்னிட்டு 230 வகையில் சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி இன்று தொடங்கியது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில், ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த மாதம் முழுவதும் சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை புரிவர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி மற்றும் உலக புகழ் பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படும். 



இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதம் 123 -வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படவுள்ளது. அதில் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரெனங்கிளாஸ், பேன்சி உட்பட 230 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்டது.



இதையடுத்து, அதனை நடவு செய்யும் பணி தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடக்கி வைத்தார். இந்நிலையில், எதிர் வரும் மே மாதம் 230 வகையி, சுமார் 2 லட்சம் பல வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இவ்வாண்டு மலர் காட்சி அரங்கினுள் 15 ஆயிரம் வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...