10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது ஊழலுக்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும் : கோவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு

கோவை : பொருளாதார ரீதியாக முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது ஊழலுக்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் அ.தி.மு.க தெளிவாக இருக்கின்றது என துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.


கோவை : பொருளாதார ரீதியாக முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது ஊழலுக்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் அ.தி.மு.க தெளிவாக இருக்கின்றது என துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அவர் கூறியதாவது ;- நேற்று மக்களவையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வர மசோதா தாக்கல் செய்திருப்பது பாதிப்பானது. சமூக நீதிக்காக இட ஒதுக்கீடு கொடுப்பதுதான் சரியானது. பொருளாதார அடிப்பையில் கொடுத்தால் ஊழல், அநீதி, குழப்பம் ஏற்படும். 

சமத்துவத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத் தந்தை பெரியாரும், நீதிகட்சியினரும் போராடி இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என அம்பேத்கர் உட்பட பலர் எதிர்த்தனர். பிறப்பால் ஏற்பட்ட சாதியை மாற்றமுடியாது. மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடி என அனைத்துத் தலைவர்களும் சாதிப் பெயரை தங்களின் பெயருக்கு பின்னால் கொண்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் யாரும் சாதி பெயரைப் போடுவதில்லை. 

இந்நிலையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவது தீங்கு செய்யும் திட்டமாகும். இது தெரியாமல் பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து, மாதம் ரூ.70 ஆயிரம் வருமானம் பெறுபவர் நலிவற்றவரா? வருடம் ஒரு லட்சம் கூட வருமானம் இல்லாதவர் நலிவுற்றவரா? என கேள்வி எழுப்பினார். 

"வட மாநிலங்களில் ஓட்டு வங்கியை பெறுவதற்காக தவறான கருத்தை கொண்ட இந்த திட்டத்தை பா.ஜ.க கொண்டு வருகின்றது. பணக்கார முற்பட்ட வகுப்பு மக்களுக்காக 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது கண்டிக்கத்தக்கது. இது அ.தி.மு.க.வின் கொள்கை. இன்று அதிமுக எம்.பிக்கள் ராஜ்யசபாவிலும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம். 

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை. மற்ற கட்சிகள் பா.ஜ.கவின் மாயவலையில் விழுந்துவிட்டன. இதனால் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடையாது. நேற்று நாடாளுமன்றத்தில் என்னை அனாதையாக விட்டுவிட்டனர். 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்திருந்தால் இன்னும் வலுவாக வலியுறுத்தி இருப்போம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நீதி, வட இந்திய எம்.பி,.க்களுக்கு ஒரு நீதி என நாடாளுமன்றத்தில் இருக்கிறது.

அதனால் தான் மற்ற மாநில எம்.பிக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை ஆனால் தமிழக எம்.பிக்கள் மட்டும் சஸ்பென்ட் செய்யப்படுகின்றனர். பா.ஜ.க கூட்டணியிலும் நாங்கள் இல்லை, பா.ஜ.க கொள்கையையும் எப்போதும் நாங்கள் ஏற்றதில்லை. அகஸ்ட்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர், ரபேல் விமானம் ஆகிய பிரச்சினைகளில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டி மேட்ச் பிக்சிங் போல செயல்படுகின்றனர். 

பாதுகாப்பு துறையில் உள்ள பிரச்சினை குறித்து பேசினால், நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் என கூறி பேசவிட மாட்டார்கள் என மக்களை திசை திரும்பவும், மாநில கட்சிகளை பழிவாங்கவும் தேசிய கட்சிகள் முயல்கின்றன. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் செயல்படுகிறோம். வேறு கட்சியிடம் மண்டியிடவோ, பயப்படவோ அதிமுகவிற்கு அவசியம் கிடையாது. 

இந்த பிரச்சினை தொடர்பாக நீதி மன்றத்திற்கு மற்றவர்கள் போவார்கள். சமூக நீதி காக்க வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வலியுறுத்துவதை விட சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தில் முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக வலியுறுத்தியுள்ளோம். அ.தி.மு.க தலைமையுடன் கலந்து பேசிய பின்னர்தான் நேற்று நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு குறித்து பேசினேன். 

மத்திய அரசுடன் நல்லுறவில் இருக்கின்றோம். ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணியில் அ.தி.மு.க இல்லை. தமிழக அரசை இயக்குவது மக்கள் தான். இந்த இட ஒதுக்கீட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் இது சட்டமன்றத்திற்கு வரும் போது பார்க்கலாம். பொருளாதார இட ஒதுக்கீடு என்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதில் அதிமுக தெளிவாக இருக்கின்றது, இவ்வாறு துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...