சிங்காநல்லூர் ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய்க்காக காத்துக்கிடந்த மூதாட்டிகள் மயக்கம்

கோவை: பொங்கல் பண்டிக்காக தமிழக அரசு வழங்குவதாகக் கூறிய ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்க கோவையில் உள்ள ரேசன் கடையில் வெயிலில் காய்ந்து காத்துக்கிடந்த இரண்டு மூதாட்டிகள் திடீரென மயக்கமடைந்தனர்.

கோவை: பொங்கல் பண்டிக்காக தமிழக அரசு வழங்குவதாகக் கூறிய ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்க கோவையில் உள்ள ரேசன் கடையில் வெயிலில் காய்ந்து காத்துக்கிடந்த இரண்டு மூதாட்டிகள் திடீரென மயக்கமடைந்தனர்.



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை வழங்கல் துறை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. கோவையைப் பொறுத்தவரையில் பெரும்பாலான ரேசன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த இலவச பொருட்களை வாங்க அதிகாலை முதலே மக்கள் ரேசன் கடைகளில் குவிந்தனர்.

அதற்கு முன்னதாகவே கடைகளை ஆக்கிரமித்த அ.தி.மு.க தொண்டர்கள், தங்களது கட்சி சார்பில் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது போன்று கட்சிக்கொடியை ஆங்காங்கே பறக்கவிட்டனர். மேலும், பேனர்கள் அடித்து ஆங்காங்கே நிறுவி உள்ளனர்.



ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அ.தி.மு.க தொண்டர்களின் மேற்பார்வையில் தான் என்பதைப் போன்று ரேசன் கடைகளின் அருகில் கரை வேட்டிகளைக் காண முடிந்தது.

இந்த நிலையில், சிங்காநல்லூர் பகுதியில் இலவச பொருட்கள் மற்றும் பணம் வாங்க வரிசையில் நின்ற இரண்டு தங்கமணி மற்றும் வனஜா என்ற இரண்டு மூதாட்டிகள் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த பெண்கள் மற்றும் காவலர்கள், மூதாட்டிகளுக்கு தண்ணீர் கொடுத்து, பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்து ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

தடை

பொங்கல் பரிசுப்பொருளை ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மேலும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்குப் பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் வழங்க மட்டுமே தடை. அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கத் தடை ஏதும் இல்லை எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் வெள்ளை நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...