கோவை : 134 வருட பழமையான கட்சியின், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதை கல்கி சுப்ரமணியம் வரவேற்றுள்ளார்.

தேசிய அளவில் புகழ்பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பன்முகம் கொண்டவர் அப்சரா ரெட்டி. முதன் முதலாக கடந்த 2016 -ல் பாஜக -வில் இணைந்த அப்சரா, அதற்கு பிறகு அதே ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து, செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்தார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து, கல்கி சுப்ரமணியம் கூறுகையில், "இது போன்ற மாற்றங்கள் திருநங்கைகள் மீது இருக்கும் சமூக களங்கத்தை உடைத்தெறியும். அங்கீகாரத்தை நிலைப்படுத்தும்," என்றார்.
அப்போது, திருநங்கைகள் அரசியலுக்கு வந்தால் மக்கள் எப்படி எதிர் வினையாற்றுவார்கள் என்று கேள்வி எழுப்பும் போது, மக்கள் எங்களை நிச்சயமாக எங்களை ஆதரித்து ஓட்டளிப்பார்கள், எனப் பதிலளித்தார்.
மேலும், பழமையான கட்சியில் இது போன்ற முயற்சிகள் எடுத்திருப்பது நல்லதொரு தொடக்கம், அதனை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி ஒன்றில் திருநங்கை நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.