திருப்பூர் : அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, அதற்காக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெயரை பயன்படுத்தி ரூ.56 லட்சம் வரையில் மோசடி செய்த நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தனக்கு தெரிந்த நபரான சாய் அருண் என்பவரிடம் தனக்கு அரசு வேலை வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சாய் அருண் தனக்கு தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடைய உதவியாளர் கார்த்திகேயன் என்பவரை நன்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, சில லட்சங்கள் கொடுத்தால் அரசு பணி எளிதில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராஜேஸ்வரன் இதுகுறித்து தனது அக்கம்பக்கத்தில் உள்ள பழனிவேல், மகேந்திரன், இசக்கி துரை மற்றும் பழனிவேலு ஆகியோர் மூலமாக ரூ.36 லட்சம் ரூபாய் வரையிலும் அரசு வேலை பெறுவதற்காக அவருடைய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.
அதற்காக முன்னதாக, ராஜேஸ்வரன் ஏ.டி.எம் கார்டை வாங்கிய சாய்அருண் அதனைக் கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். அதன் மூலம் கார்த்திகேயன் ரூ.36 லட்சம் பணத்தையும் எடுத்துள்ளார். மேலும், பணி நியமனம் குறித்த தகவல்களுக்காகவும், ஆவணங்கள் சமர்ப்பிப்பது தொடர்பாகவும் கார்த்திகேயன் அவ்வப்போது ராஜேஸ்வரன் மற்றும் அவருடன் வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் பேசியுள்ளார்.
அவர் பேசும் பொழுது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தன்னுடன் இருப்பதாகவும், அவருக்கு தான் பணம் பெற்று தரப்படுவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பேசுவது போல குரல் மாற்றி மற்றொருவர் பேசியுள்ளார். இதை போல தொடர்ந்து பலமுறை பேசியும் தங்களுக்கு வேலையோ, அது தொடர்பான உத்தரவுகளோ வராத நிலையில், சந்தேகமடைந்த ராஜேஸ்வரன் சாய் அருணிடம் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் சாய் அருண் இருவரும் தொலைபேசி எண்களை அணைத்துவிட்டுத் தலைமறைவாகினர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளனர். அப்போது சென்னையில் சாய் அருண் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற ராஜேஸ்வரன் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அவரைப்பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், இதே போல அரசு பணி வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட 6 பேர் ரூ.20 லட்சம் பணம் பெற்று மோசடி தங்களை மோசடி செய்ததாக கார்த்திகேயன் மற்றும் சாய்அருண் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் பட்டியலானது மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.