பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதவிற்கு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் தம்பிதுரை எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசிய நிலையில், எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தும் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முதலமைச்சர் மறுப்பு தெரிவித்திருப்பது அ.தி.மு.கவின். இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதவிற்கு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க.வின் தம்பிதுரை எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசிய நிலையில், எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தும் இந்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முதலமைச்சர் மறுப்பு தெரிவித்திருப்பது அ.தி.மு.கவின். இரட்டை நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளோருக்கு, பொதுப் பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மக்களவையில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, மக்களவையின் துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை பேசியதாவது:- பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இதுவரை மத்திய அரசு என்ன செய்திருக்கிறது..? பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது, இடஒதுக்கீடு எதற்காக..? மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் பலனில்லை எனும் போதுதான் இடஒதுக்கீடு முதலான திட்டங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். அம்பேத்கர் கல்வியில் சிறந்து விளங்கினார். ஆனாலும் தலித் என்பதாலேயே அவர் அவமதிக்கப்பட்டார். படித்திருந்தும் அவமதிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்னும் போதுதான், அம்பேத்கர் தனி இடஒதுக்கீடு கோரினார். நாட்டில் சாதீயம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் நீதி நிலைநாட்டப்படும்.
தமிழகத்தில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும்தான் வசிக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்றால், போலி வருமானச்சான்றுகள் மூலம் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினால், அது முறையானதல்ல.
15 லட்சம் தருவதாகச் சொன்னீர்கள். அதை வழங்கினால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அவசியமே இல்லையே..?. 10 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவில் ஏராளமான குறைகள் உள்ளன, இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளோருக்கு பொதுப்பிரிவில் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வந்தார். ஆனால், நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.