"தடையை மீறி சிங்காநல்லூர் குளத்தில் தொடரும் மீன் பிடி தொழில்"

கோவை: பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாகத் திகழும் கோவை சிங்காநல்லூர் குளத்தில் மீன் பிடி தொழில் தடைசெய்யப்பட்ட பின்னும் கூட ஒப்பந்ததார் மீன்பிடிப்பதைத் தொடர்வதால், அங்குள்ள பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிப்படைந்து வருகிறது.

கோவை: பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாகத் திகழும் கோவை சிங்காநல்லூர் குளத்தில் மீன் பிடி தொழில் தடைசெய்யப்பட்ட பின்னும் கூட ஒப்பந்ததார் மீன்பிடிப்பதைத் தொடர்வதால், அங்குள்ள பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிப்படைந்து வருகிறது. 

தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக சிங்காநல்லூர் குளம் அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, குளத்தின் உயிர் பன்மை தன்மையைக் காக்க, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 -ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குளத்தில் வணிக நோக்கில் மீன் பிடிப்பதை தடை செய்து அறிவித்தார். அதன்படி, ஜனவரி 1 -ம் தேதி முதல் அந்த குளத்தில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 



அந்நிகழ்வில், தாவர, பறவை உள்ளிட்ட 720 வகையான பல்லுயிர்கள், அழியும் தருவாயில் இருக்கும் நன்னீர் ஆமைகள் உட்பட பல்வேறு உயிரினங்களுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இதையொட்டி அதே நிகழ்வில், கோவை நன்னீர் மீன்கள் பாதுகாப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தார். 

அந்த திட்டத்தின் கீழ், 5 வகையான உள்ளூர் மீன்கள் மற்றும் 2 இறால் ஆகியவை பெருக்கத்திற்காக குளத்தில் விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மீன்களை விட்டு பெருக்கத்தை அதிகப்படுத்துவதாகத் திட்டம் இருந்தது. ஆனால், மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மீனவர்கள், விரைவில் இனப்பெருக்கம் செய்யும் மீன்களை குளத்தில் விட்டு தொழிலை மேற்கொள்கின்றனர். இந்த மீன்கள், ஏற்கனவே குளத்தில் வாழும் உள்ளூர் மீன்களை இரையாக எடுத்துக் கொள்கின்றன. 

இந்த சுழற்சியான நிகழ்வில், குளத்தில் இருக்கும் மீன்களைக் காப்பாற்ற படிப்படியாகத் தான் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், இன்றளவும் குளத்தில் நடைபெறும் மீன் பிடி தொழில் அதற்கு பெரிய தடையாக உள்ளது. 

இதனிடையே, சிங்காநல்லூர் குளத்தில் மீன் பிடிக்க போடப்பட்டுள்ள ஒப்பந்தம் கடந்த வருடம் 31 -ம் தேதி நிறைவடைந்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் பல்லுயிர்தன்மையை பாதுகாக்க வேண்டி, அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காத நிலையில், தகவலை மீன்வளத்துறைக்கும் அனுப்பி உறுதி செய்துள்ளது. 

ஆனால், ஒப்பந்ததாரர் தடைசெய்யப்படக் குளத்தில் மீன்பிடி தொழில் தொடர்ந்து நடத்தி வருகிறார். மேலும், குளத்திற்கு வெளியிலே அந்த மீன்களைப் பிடித்து வந்து விற்பனைக்கு பரப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

இதற்கிடையில், மீன்களை லாவகமாக பிடிக்கக் கையாளும் முறைகளான குச்சியை வைத்து தட்டுதல், பரிசலை டம் டம் என ஒலிக்கச் செய்தல் முதலிய தொந்தரவுகளால் பறவைகள் அங்கிருந்து விரப்படுகின்றன. இதனால் அவற்றின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 

எனவே, இதை தடுக்கும் வண்ணமாகக் கோவை மாநகராட்சி அதிகாரிகள் குளத்துக்கு அருகில், 'மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி' என அறிவிப்பு பலகைகள் வைக்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...