கோவை : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 16 -ம் தேதி அனைத்து இறைச்சிக் கூடங்களையும் மூட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் நடத்தப்படும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு மற்றும் போத்தனூர் மாடு அறுவைமனைகள், துடியலூரில் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியில் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.