140 ஆண்டுகள் வாழ்ந்து கொரியாவை ஆண்ட தமிழ் பெண் : நிரூபிக்க பாய்மர படகில் கொரியா பயணிக்கும் ஆர்வலர்கள்

கோவை: 140 ஆண்டுகள் வாழ்ந்து கொரியா நாட்டை ஆட்சி செய்தவர் ஒரு தமிழ் பெண் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இப்போதே ஆச்சரியப்பட வேண்டாம் இன்னும் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.


கோவை: 140 ஆண்டுகள் வாழ்ந்து கொரியா நாட்டை ஆட்சி செய்தவர் ஒரு தமிழ் பெண் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இப்போதே ஆச்சரியப்பட வேண்டாம். இன்னும் பல செய்திகளுடன் வெளிவந்துள்ளன.

உலகம் கலாச்சார வளர்ச்சி பெறுவதற்கு முன்பே கப்பல் வைத்து வாணிபம் செய்த இனம், தமிழ் இனம் என்றும், இந்தோ, பசுபிக் கடல் வழியே ஆப்ரிக்கா, தாய்லாந்து, மலேசியா, சீனா, கொரியா உள்ளிட்ட பல நாடுகளில்  தமிழர்களின் அடையாளங்கள் இதற்கு உதாரணங்களாக உள்ளது என்றும் சில ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 



இந்த தகவலை தமிழ் ஆராய்ச்சியாளரும், தென்புலத்தார் திரை மீளார் மற்றும் பன்னாட்டு தமிழ் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளையின் குழும தலைவர் ஓடிசா பாலு நேற்று சென்னையில் நடைபெற்ற உலக தமிழாய்வு மாநாட்டில் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் கொரியாவை ஆட்சி புரிந்த தமிழ் அரசியான செம்பவளம் இப்படித்தான் இருந்திருப்பார் என்ற ஓவிய புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.



மாநாட்டில் ஒடிசா பாலு வெளிக்கொண்டு வந்த தகவல்கள் பின்வருமாறு:- 

தமிழர் வரலாறு மிகவும் தொன்மையான ஒன்று. குமரிக்கரை கொண்ட தமிழகம் கி.மு 10-ம் நூற்றாண்டுக்கு முன்னர் கரை ஆயி நாடு என அழைக்கப்பட்டது. கடற்கரையை ஒட்டியை இப்பகுதியில் இருந்து கொரியாவுக்கு பெருமளவு கடல் வணிகம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டியர்களாக அறியப்படும் அரசர்கள் வணிகத்திற்காகக் கொரியா சென்று அங்கு ஆட்சியும் செய்தார்கள்.

கொரியாவை கி.மு 209 -ம் ஆண்டில் ஆட்சி செய்த ஆயி வம்சத்தின் சுரோ என்ற அரசர் முக்கியமானவர். கரை ஆயி என்ற இடத்தில் இருந்து வந்த காரணத்தால், கொரிய மக்கள் இவரை ஆயி அரசர் என அழைத்தனர். ஆயி வம்சத்தின் பரம்பரை தொடர்ந்து கொரியாவை ஆட்சி செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக ஆயி வம்சத்தில் கிம்ஸ் சுரோ ஆட்சி செய்தார்.



இவருக்கு திருமணம் செய்ய, தமிழகத்தின் நில அமைப்பில், கன்னியாகுமரி தெங்கா பட்டினம், திருநெல்வேலி காயல்பட்டினம், மதுரை வைகை பகுதியை உள்ளடக்கிய கரை ஆயி நாட்டின் இளவரசி கொரியாவுக்கு அழைக்கப்பட்டார்.

பாய்மர கப்பல்

கி.பி 48 -ம் ஆண்டில் மூன்று பாய் கட்டிய சிவப்பு நிற பாய்மர கப்பல் மூலம் 22 பணியாளர்கள் கொண்டு தமிழக இளவரசி கொரியா பயணித்தார். வரலாற்று ஆய்வாளர்களால் செம்பவளம் என அறியப்படும் இந்த இளவரசியை கொரிய மக்கள் ஹியோ ஹவாங் ஒக் என அழைத்தனர். அதன்பின், கிம்ஸ் சுரோ, ஒக் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒக் 157 வருடம் உயிருடன் இருந்தார். இதில், கொரியாவை 140 ஆண்டுகளுக்கு நிகராக ஆட்சி புரிந்துள்ளார்.

இவரது ஆட்சிக் காலத்தில் தமிழ் பெண்களின் விளையாட்டுகளும் கொரியாவில் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக தமிழர்களின் விளையாட்டுகளான தட்டாங்கல், புனல் ஆடல், பாண்டி ஆட்டம் முதல் தமிழர்களின் மொழி, மரபு, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் போன்றவை இன்றளவும் வழக்கத்தில் உள்ளன. 






சொந்தம் கொண்டாடிய உ.பி

கொரியாவுக்குச் சென்று ஆட்சி புரிந்தது தமிழகத்தைச் சேர்ந்த ஆயி என்ற நிலத்தின் அரசி என அறியாத காலத்தில் கொரியர்கள் உத்திர பிரதேசம் பகுதியில் உள்ள அயோக்தியா என்ற இடத்தில் இளவரசி ஒக் எனப்படும் செம்பவளம், அரசர் சுரோவுக்கு நினைவு மண்டபம் அமைத்தனர். ஆனால், தமிழகத்தின் பொதிகை மலை பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுதா என அழைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று கூறினார்.



கொரியாவை ஆட்சி செய்த தமிழக அரச பரம்பரையின் ஒட்டு மொத்த வம்சத்தினரான 80 லட்சம் பேர் தற்போது தமிழ் மொழி தொடர்புடைய வார்த்தைகளை பேசி வருகின்றனர். குறிப்பாக, வீட்டின் தூய தமிழ் வார்த்தையான குடி, தலை, செவி, மயிர், நாள், வான், புனை, இளை போன்ற பல வார்த்தைகள் புழக்கத்தில் இருந்துள்ளது.



கொரியாவின் வரலாற்று தந்தை ஹோமர் உல்பட் இதனை உறுதிப்படுத்துகிறார். அதனுடன், மொழி ஆய்வாளர் சேஷாத்திரி கொரியாவில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெயர்கள் கொண்ட அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர் என கூறியுள்ளார். கொரியாவில் சேஜாங் என்ற அரசர் 15 -ம் நூற்றாண்டில் செய்த மொழி கட்டமைப்பின் இலக்கண முறையும் தமிழாக உள்ளது.

அதன்பின், பிலிங்கர் என்பவர் 1984 -ம் ஆண்டு 500 புது தமிழ் வார்த்தைகளைக் கண்டறிந்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கொரியா, தமிழ் மொழி இடையே பொதுவாக 6 ஆயிரம் சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொரியாவில் மாறன், குடுமி, குமரி, சோளா, கரை, காயா போன்ற இடங்கள் இன்றளவும் சொல் வழக்கில் உள்ளது. கொரியாவில் உள்ள பவுத்த மதத்தில் தமிழ் வைணவத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது 5 ஆயிரம் கொரியர்கள் உள்ளனர். கொரியாவில் 1,500 தமிழர்கள் உள்ளனர். இது போன்ற கொரிய, தமிழகம் இடையில் பல தொன்ம அடையாளங்கள் இருப்பதால், கொரிய அரசு தமிழகத்தில் உள்ள கொரிய அடையாளங்களையும், கொரியாவில் உள்ள தமிழ் அடையாளங்களையும் வெளிக்கொண்டு வர முனைப்பு காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து, கொரியர்கள் பலர் தமிழகத்துடன் இணைந்து கொரிய, தமிழ் தொன்மம் ஆராய்ச்சியில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, கொரியாவில் பேராசிரியர்கள் ஜும்முன், சுரேஷ் குமார் போன்றவர்கள் கொரிய, தமிழ் தொன்மம் குறித்த தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணன் கொரிய இளவரசியை பற்றி முதலில் பேசினார். திருக்குறளை கொரியாவில் மொழி பெயர்க்கவும், கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு செய்யவும், கொரியா, தமிழ் அகராதியை கொண்டு வரவும் முயற்சி எடுத்து வருகிறேன். 

இவ்வாறு, கொரிய, தமிழ் இடையிலான தொன்மங்கள் அறிந்து விட்டால், அக்காலகட்டத்தில் செயல்படுத்திய வணிக முறை அறிய முடியும். இதன் மூலம், தமிழர்கள் மீண்டும் உலகளாவிய அளவில் கடல்சார் வணிகத்தில் திறம்பட செயல்பட முடியும். அதனுடன், தமிழர்களின் பெருமை, திறமை, ஆட்சி முறை உலகமெங்கும் சென்றதை மீண்டும் நிலை நிறுத்தப்படும். தமிழ் மீது கொண்ட பற்று மற்றும் தொடர் ஆராய்ச்சிகள் காரணமாக உத்திர பிரேதசம் சொந்தம் கொண்டாடிய நமது தமிழ் பாரம்பரிய பெருமையை மீட்டெடுத்துள்ளனர் - இவ்வாறு தமிழ் பெருமையை மாநாட்டில் பறைசாற்றினார் ஓடிசா பாலு.

பாய்மர படகில் தமிழ் இளவரசி 22 நாட்கள் பயணித்து கொரியாவை அடைந்ததாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், தற்போது அதனை நிரூபிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

பயணம்

அதன்படி, தமிழகத்தில் இருந்து கொரியாவுக்கு 22 நாட்களில் பாய்மர படகில் சென்றடைவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று நடைபெற்ற மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஆராய்ச்சி குழுமம், அறிஞர்கள் மற்றும் ஊடகத்தினரை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். பாரம்பரியத்தைப் பறைசாற்ற புறப்பட்டிருக்கும் இந்த குழுவிற்கு பாராட்டுக்களை சில குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...