ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது : சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

கோவை : ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுத்து அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் நிலையில், இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு என்பது ஏமாற்று வேலை. இது தொழில்முனைவோரை ஏமாற்றும் செயலாகும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் கடலூர் நீதிமன்றம் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அந்தப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு காரணமாக, இந்த வழக்கு பதியப்பட்டு நடத்தப்பட்டது. குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இந்த தீர்ப்பு வந்து இருக்கின்றது. குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் என தமிழகத்தில் எதுவும் இல்லை. போஸ்கோ சட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த காவல்துறையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். 

அதேவேளையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கின்றது. அவசர சட்டத்தை நிறைவேற்றினால்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடமுடியும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கின்றது. உரிய ஆவணங்களுடன் இந்த வழக்கை அரசு நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடரும். 

உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கொண்டு வரப்பட்டுள்ள மசோதா, தேர்தல் நோக்கத்திற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்தவித விவாதம் நடத்தாமல் இந்த இடஒதுக்கீடு கொண்டு வர முயற்சிப்பது சரியானது அல்ல. ஏதாவது சாகசம் செய்து காட்ட பா.ஜ.க. கனவு காண்கின்றது. அந்த கனவு பலிக்காது. அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க திராணியற்று இருக்கின்றது. ஊழல், முறைகேடு என்பதை தவிர வேறு எதுவும் அ.தி.மு.க.வில் இல்லை.

மேலும்,சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகின்றார். மனித உரிமைகளை, மதத்தைக் காட்டி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் கேபிள்களை புதை வழித்தடமாக கொண்டு செல்ல வேண்டும். புதைவழித்தடமாக கொண்டு செல்ல முடியாத இடத்தில் அமைக்கும் மின்கோபுரங்களுக்கு வாடகை கொடுக்க வேண்டும். மரபுகளைப் பற்றி கவலைப்படாத ஆளுநராக தமிழக ஆளுநர் இருக்கின்றார். சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு இணையாக அதிகாரியை அமரவைத்து இருப்பது முறையான நடவடிக்கையாக இல்லை. தமிழகத்தில் ஆடு, மடிக்கணினி, சைக்கிள் திட்டங்களும், ஆதரவற்றவர்களுக்கு ஒய்வூதியம போன்ற ஜெயலலிதா கொண்டு வந்த பழைய திட்டங்களே முழுமையாக நடைபெறுவதில்லை. பழைய திட்டங்களையே முழுமையாகக் கொண்டு செல்ல முடியாத போது, பொங்கல் பரிசாக குடும்பத்தினருக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம் என்பது முறையாக நடைபெறுமா என்பது தெரியவில்லை, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...