செய்திதாள்களில் பொதிந்து உணவு பொருட்களை விற்றால் அபராதம் : இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி : செய்திதாள்களில் பொதிந்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2019 -ம் ஆண்டு ஜூலை 1 -ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி : செய்திதாள்களில் பொதிந்து உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு 2019 -ம் ஆண்டு ஜூலை 1 -ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என இந்திய உணவு பாதுகாப்பு தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சாலையோரக் கடைகள் தொடங்கி பலசரக்கு கடைகள் வரை செய்திதாள்களில் பொட்டலமிட்டு உணவு பொருட்களை பரிமாறும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக, செய்திதாள்கள், காகித தாள்கள், மறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக்களில் உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு வர்த்தக நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏனென்றால், இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய இரண்டு ஆய்வுகளில், உணவு பொருட்கள் பொதியப் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கன உலோகங்கள் மற்றும் வேதி பொருட்கள் உணவு பொருட்களில் கலப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் 13.4% உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனாலே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த புதிய விதிமுறைகளுடன் கூடிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற 2019 -ம் ஆண்டு ஜூலை 1 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத மற்றும் சட்ட விரோதமாக உதிரியாகப் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...