ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : திருப்பூரில் மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : ஆன்லைன் மூலம் விற்பனை செய்யக்கூடிய மருந்து வணிகத்தைத் தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : ஆன்லைன் மூலம் விற்பனை செய்யக்கூடிய மருந்து வணிகத்தைத் தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு இந்தியா முழுவதும் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கக் கோரி இந்தியா முழுவதும் 719 மாவட்டங்களில் ஆட்சியரிடம் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் இன்று மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மருந்துகள் சங்கத்தினர் சார்பில் திருப்பூர் ரயில்நிலையம் முன்பு ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆன்லைன் வணிகத்தை மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும், அவ்வாறு செய்வதால், மருத்துவருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் போன்ற மாத்திரைகள் விற்கப்படும் சூழல் ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர். எனவே, சமுதாய சீரழிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், இந்த ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...