திருப்பூரில் ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் தம்பதியினர் தற்கொலை

திருப்பூர் : பல்லடம் அருகே திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : பல்லடம் அருகே திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன கணவன், மனைவி ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



திருப்பூர் மாவட்டம், பல்லடம் மகாலட்சுமிநகர் பத்தாவது வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (32). இவர் மனைவி லாவண்யா (24). திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடமாகியும் குழந்தைகள் இல்லை. 

இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அப்பகுதியினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது மின்விசிறியில் ஒரே சேலையால் தூக்கிட்டு இருவரும் பிணமாகத் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இதையடுத்து, வீட்டின் கதவுகளை உடைத்து உள்ளே சென்ற போலீசார், கணவன், மனைவி ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கணவன், மனைவி தற்கொலை செய்து கொள்ள கடன் பிரச்சனை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இளம் தம்பதியினர் தற்கொலை சந்தேகத்தை ஏற்படுத்துவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...