கோவை : உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதியவர் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

புனேவை சேர்ந்தவர் பிரமோத் லட்சுமணன் மகாஜன் (67). விவசாயியான இவர், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த அக்டோபர் மாதம் 20 -ம் தேதி புனேயில் இருந்து புறப்பட்டார். வரும் 28 -ம் தேதியுடன் பயணத்தை முடிக்கத் திட்டமிட்டு உள்ள பிரமோத், பல்வேறு மாநிலங்களைக் கடந்து 80 -வது நாளாக இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார். பின்னர் நோயாளிகளுக்குத் துண்டு பிரசுரங்களை அளித்தார். மேலும், இந்த முதியவருக்குக் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களும், மருத்துவர்களும் மற்றும் பொதுமக்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.
இதுகுறித்து பிரமோத் லக்ஷ்மனன் மகாஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 10 ஆயிரம் கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளேன். கடந்த அக்டோபர் மாதம் என் பயணத்தை தொடங்கினேன். மேலும், எனது ஒரு சிறுநீரகத்தை முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு அளித்திருக்கிறேன்.
மேலும், நாட்டில் உடல் உறுப்பு தானம் வேண்டிக் காத்திருப்பு பட்டியலில் ஏராளமானவர்கள் உள்ளனர். தற்போது 10 ஆயிரம் பேருக்கு ஒருவர் தான் உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் பேசினார்.