சென்னை: பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஸ்வாசம் மற்றும் பேட்ட திரைப்படங்களை இணையதளம் மற்றும் கேபிள் டி.வி.,களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட டாப் நடிகர்களின் திரைப்படங்கள் பண்டிகைக் காலங்களின் போது தமிழகத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்வது வழக்கம்.
அதே நேரத்தில் படம் வெளியாகும் அதே தினத்தில் இணையத்தளத்தில் திரைப்படங்கள் சட்ட விரோதமாகப் பதிவேற்றப்படுகின்றது. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகிஸ்தர்களும் தங்களது லாபத்தின் ஒரு பகுதியினை இழந்து வருகின்றனர்.
பலபேரின் உழைப்பு திருடப்படுவதாகவும், இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் அவர்கள் குரல் கொடுத்துதான் வருகின்றனர். இந்த குரலுக்கெல்லாம் பயப்படாமல் செயல்பட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
இதனிடையே, வேண்டுகோள் விடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் தனது ஆட்டத்தை நிறுத்திக்கொள்ளாத தமிழ் ராக்கர்சை எதிர்த்து வழக்குத் தொடுக்க ஆரம்பித்தனர் தயாரிப்பாளர்கள். அதன்படி, சர்க்கார், மாரி -2 போன்ற பல திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர, அந்த படங்களை இணையத்தில் வெளியிட பொத்தாம் பொதுவாகத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த தடை உத்தரவுகளை மதிக்காத தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியான அடுத்த நாளே தனது இணையதள பக்கத்தில் படங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டியது.
விஸ்வாசம், பேட்ட..
அந்த வரிசையில் தற்போது விஸ்வாசம் படக்குழுவும், பேட்ட படக்குழுவும் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கம் போல இந்த படங்களையும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்துள்ளது.
என்னதான் தடை விதித்தாலும், இணையதள பக்கத்தை முடக்கினாலும் புதிதாக ஒரு இணையதள முகவரியுடன் வந்து புதிய படங்களை வெளியிட்டே தீர்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள பக்கங்கள்.