மூத்த குடிமக்களுக்காக உணவுப் பொருட்களை சேகரிக்கும் கோவை இன்னர் வீல் கிளப்

கோவை : கோவையில் உள்ள முதியோர் இல்லங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு உணவு வழங்கும் விதமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை கோவை இன்னர் வீல் கிளப் அமைத்துள்ளது.

கோவை : கோவையில் உள்ள முதியோர் இல்லங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு உணவு வழங்கும் விதமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை கோவை இன்னர் வீல் கிளப் அமைத்துள்ளது.



இதற்காக கோவை மாநகரில் உள்ள முக்கிய அல்லது பிரபலமான வணிக வளாகங்களில் உணவு சேகரிக்கும் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டிகளில், அரிசி, பருப்பு, ஆயில், சர்க்கரை மற்றும் பழங்களை பொதுமக்கள் வைத்து உதவலாம். இந்தப் பெட்டியில் இருக்கும் பொருட்கள் வரும் 14-ம் தேதி எடுக்கவிருக்கிறது. அதில் உள்ள பொருட்கள் கோவை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும். 



கோவை இன்னர் வீல் கிளப், நேஷனல் மாடல் பள்ளி சங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறது. அந்தப் பள்ளியிலும் இந்த உணவுப் பொருட்கள் சேகரிப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 

உணவுப் பொருட்கள் சேகரிப்பு பெட்டி வைக்கப்பட்டுள்ள இடங்கள் : 

• நீல்கிரிஸ், ஆர்.எஸ்.புரம்

• பழமுதிர் நிலையம், கோவை அரசு கலை கல்லூரி சாலை

• பழமுதிர் நிலையம், சென்ட்ரல் ஸ்டுடியோ, திருச்சி சாலை

• பழமுதிர் நிலையம், அவிநாசி சாலை, ஜிடி அருங்காட்சியகம் அருகில்

• குமார் ஸ்டோர்ஸ், சாய்பாபா காலனி

• பழமுதிர் நிலையம், துடியலூர்

• நேஷனல் மாடல் பள்ளி, பீளமேடு

• ரகேஜா குடியிருப்பு, பந்தயசாலை

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...