கோவை : கோவையில் தங்க நகைகளுடன் கடத்தப்பட்ட பிரபல நகைக்கடைக்கு சொந்தமான கார், மதுக்கரை அருகே விட்டுச் சென்றுள்ளதையறிந்த போலீசார், நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லரியிலிருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிளை கடைக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காக்காசாவடியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்போது, திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரின் பின்பகுதியில் இரண்டு கார்கள் மோதின. பின்னர், அந்த இரண்டு காரில் இருந்து இறங்கி வந்த 10 பேர் கொண்ட கும்பல் கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைத்தனர்.

மேலும், காருக்குள் இருந்த திருச்சூரைச் சேர்ந்த அர்ஜீன் (22), மற்றும் வில்ப்ரட்டை (33) தாக்கிவிட்டு, ரூ. 98 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் காரை திருடிச் சென்றனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காக்காசாவடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தங்க நகைகளுடன் கடத்தப்பட்ட காரை, மதுக்கரை தென்றல் நகர் அருகே நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையறிந்த தனிப்படை போலீசார் இன்று காலை காரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த காருக்குள் குற்றவாளிகள் குறித்த ஏதாவது தடயங்கள் இருக்குமா..? என்றும் சோதனை செய்தனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க ஏற்கனவே நான்கு தனிப்படை அமைத்து தேடப்பட்ட வந்த நிலையில், இன்று கூடுதல் எஸ்.பி முத்தரசு தலைமையில் மேலும் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நகைகளுடன் தப்பியோடிய கொள்ளையர்கள் நீலகிரி, திருப்பூர், ஈரோடு சேலம் போன்ற பல்வேறு பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.