கோவை : கோவை மத்திய ரயில்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ரூ. 75 லட்சம் மதிப்பில் பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-ல் எஸ்கலேட்டர் வசதி செய்யப்படவுள்ளது.

தொழில்நகரமான கோவை மாநகருக்கு கல்வி மற்றும் வேலைக்காக அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலும், ரயில் போக்குவரத்தை நம்பி இருப்பதால், கோவை மத்திய ரயில்நிலையம் எப்போதும் கூட்டம் நிறைந்தே காணப்படும். இந்த நிலையில்,
கோவை மத்திய ரயில்நிலையத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பில் பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-ல் எஸ்கலேட்டர் வசதியை ஏற்படுத்த ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, இடதுபுறம் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு, எஸ்கலேட்டர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "பயணிகளின் வசதிக்காக கோவை மத்திய ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாட்ஃபார்ம் 1-A வில் எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளன. தற்போது, பிளாட்ஃபார்ம் 1 மற்றும் 2-க்கு செல்லும் வழியில் எஸ்கலேட்டர் வசதி செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நான்கு அல்லது ஐந்து மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன," என்றார்.