கோவை : நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதில், மக்கள் சேவையில் உள்ள ரயில்வே, வங்கிகள், அஞ்சல், காப்பீடு உள்ளிட்ட துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என 17 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் காரணமாக, இன்று ஆட்டோக்கள் ஓடாது என ஆட்டோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில், கோவையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் 10,000-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தில் கோவை சார்பில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபெறுகின்றன. இன்று ஒரு நாள் கோவை மாநகர் பகுதிகளில் 10 ஆயிரம் ஆட்டோகள் இயக்கவில்லை," என்றார்.