நாடு தழுவிய வேலைநிறுத்தம் : கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

கோவை : நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


கோவை : நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் 10 தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது. இதன் காரணமாக, கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நடைபெறும் பந்த் காரணமாக, பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதே சமயம், கோவை மாநகர் பகுதிகளில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...