பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 4-வது இடம் : முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா விமர்சனம்

நீலகிரி : இந்தியா சுகாதார அறிக்கையில் பன்றி காய்ச்சலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


நீலகிரி : இந்தியா சுகாதார அறிக்கையில் பன்றி காய்ச்சலில் தமிழகம் 4-வது இடத்தில் இருப்பதாக உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகர தி.மு.க. சார்பில், தமிழர் திருநாள் தைப் பொங்கலை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் உதகை ஏ.டி.சி சுகந்திர திடலில் நடைபெற்றது. இவ்விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்பு பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உரையாற்றினார். 



அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை கையில் வைத்துக்கொண்டு, உறவினர்களுக்குப் பணி ஒப்பந்தம் கொடுத்து கமிஷன் பெறுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், போக்குவரத்துத் துறையில் ரூ. 300 கோடி ஊழல் புரிந்துள்ள போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேருந்து வாங்கியதில் ஊழல், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கமிஷன் குற்றச்சாட்டு, முட்டையில் ஊழல் என தமிழக அரசு ஊழல் நிறைந்த மைனாரிட்டி அரசாக உள்ளது. 



இந்தியா சுகாதார அறிக்கையில் பன்றி காய்ச்சலில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய பொதுமக்களை சுட்டுக் கொன்று, வெறும் 103 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்துக்குப் புறம்பான அரசாங்கம், பிரதமர் மோடி உதவியுடன் தற்போது நடந்து வருகிறது, என அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...