கோவை : 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை முதல் தொடங்கியது.

மத்திய அரசுக்கு எதிராக 10 தொழிற்சங்கத்தினர், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், மருத்துவம், தொலைத் தொடர்பு துறையினர் இன்றும், நாளையும் (ஜன.,09) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில் 20 கோடி பேர் பங்கேற்க உள்ளதாகவும், டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளதாகவும், இது போன்ற பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால், வங்கி சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்காது என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேசமயம், அசாமில் ரயிலை மறித்து சி.ஐ.டி.யு. அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.