7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை : கோவையில் தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவை : கோவையில் தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர். 



மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிட வேண்டும், பழிவாங்கும் நோக்கில் பணியிட மாற்றம் ரத்து செய்தல், இடம் மாறுதல் ஆணைப் பெற்றும் விடுவிக்கப்படாத செவிலியர்களை விடுக்கக் கோருதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை தலைவர் மணிமேகலை தலைமை ஏற்றார். மாவட்ட துணை தலைவர் சிவபிரியா, மாவட்ட செயலாளர் ஹெப்சியா, மாவட்ட துணை தலைவர் ஜான்சி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 60 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதையடுத்து, ஏழு அம்ச கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், தீர்மானங்களை மாவட்ட ஆட்சியர் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...