நீலகிரி : நீலகிரியில் அரசு உதவி பெறும் எச்.பி.எப்., உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளியை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பிங்கர் போஸ்ட் அருகே எச்.பி.எப்., பகுதியில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, 6 -ம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து இன்று ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளி வகுப்பறை, அலுவலகம் உள்ளிட்டவற்றின் கதவுகள், ஜன்னல்கள் கண்ணாடிகள் அடித்து உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக ஜி1 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, ரூரல் டி.எஸ்.பி., சங்கு தலைமையில், ஜி1 இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதில் பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், உடற்பயிற்சி கூடங்களின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததும், அலுவலக வளாகத்தில் இருந்த கணினிகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால், பள்ளியின் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை.
இதுகுறித்து பள்ளியைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, பள்ளியின் முன்னேற்றத்தைப் பொறுக்காத சிலர் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆகையால், பள்ளியைச் சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனைத் தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.