பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி : அப்பர்பவானி அரசு பேருந்தை இயக்கக் கோரி மனு

நீலகிரி : பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதையடுத்து மீண்டும் அப்பர்பவானி அரசு பேருந்தை இயக்கப் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

நீலகிரி : பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதையடுத்து மீண்டும் அப்பர்பவானி அரசு பேருந்தை இயக்கப் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். 

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் அப்பர்பவானி பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தின் பெரிய அணையான அப்பர்பவானி அணை உள்ளது. இங்கு மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. 

இந்நிலையில், அப்பர்பவானி பகுதிக்கு உதகையில் இருந்து தினமும் மாலை 3.45 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து மாலை 6.30 மணிக்கெல்லாம் அப்பர்பவானி சென்றதால், இதனை கோரகுந்தா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 30 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர். 



இதனிடையே, போதிய வருவாய் இல்லை என்பதைக் காரணம் காட்டி கடந்த மாதம் அப்பர்பவானி செல்லும் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். எனவே, அவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அப்பர்பவானி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுத்தி வந்தனர். 

இது தொடர்பாக சுமார் 30 -க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், "அப்பர்பவானி பேருந்து நிறுத்தப்பட்டதால் போதிய பேருந்து வசதியின்றி பள்ளிக் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களின் நிலையறிந்து மீண்டும் அந்த பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...