சாமளாபுரத்தில் புதியதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு : ஆதார் அட்டைகளை வீசி போராட்டம்

திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்து ஆதார் அட்டைகளை வீசியும், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : சாமளாபுரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதைக் கண்டித்து ஆதார் அட்டைகளை வீசியும், பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பெருமாம்பாளையம் பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்பட உள்ளது. இதனைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பகுதியில், இந்த மதுக்கடை அமைய உள்ளதால் இடத்தை மாற்றி அமைக்கப் பலமுறை வலியுறுத்தியும், அதே பகுதியில் மதுபானக்கடையை அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. எனவே, கோவில் அருகாமையில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் மதுக்கடையை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக அவர்களின் அடையாள ஆவணமான ஆதார் அட்டைகளைக் கீழே வீசியும், பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த செயின்களை கழட்டி வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...