வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து வங்கிகள் நாளை முதல் 2 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் : தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் சம்மேளனம் சார்பில் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் சம்மேளனம் சார்பில் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வாராக் கடன்களால் நிதிச் சுமையில் சிக்கித் தவிக்கும் வங்கிகளை மேம்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் மகிளா வங்கி உட்பட அதன் துணை வங்கிகள் ஐந்தினை கடந்த வருடத்தில் இணைக்கப்பட்டன. 'பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை, இணைத்து நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, மேலும் மூன்று வங்கிகளை இணைக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட இருப்பதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை முதல் 2 நாட்களுக்கு வங்கி ஊழியர்களின் சம்மேளனம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. வங்கிகள் இணைக்கப்பட்டால், ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் கூறுகின்றனர். 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஐ,என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.யூ.டி.யூ.சி., யூ.டி.சி.யூ., டி.யூ.சி.சி., எல்.பி.எஃப். மற்றும் எஸ்.இ.டபுள்யூ.ஏ. உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்து கொள்கின்றன. அதோடு, அனைத்து இந்தியா காப்பூட்டு தொழிலாளர்களின் சங்கம், அனைத்து இந்திய பொது காப்பீடு தொழிலாளர்களின் சங்கத்தினரும் அனைத்து இந்திய எல்.ஐ.சி. தொழிலாளர்களின் கூட்டமைப்பும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. 

ஏற்கனவே, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடத்தினர். இந்த நிலையில், மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் நாடு தழுவிய 2 நாள் போராட்டம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வரும் 8, 9 தேதிகளில் நடத்த உள்ள வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்து தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தைப் பாதித்தால் அது விதிமுறை மீறிய செயல். எனவே, விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைநிறுத்த நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது. அன்று பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியல் அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பப்பட வேண்டும். வேலைநிறுத்த நாட்களில் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஒப்பந்தப் பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...