நீலகிரி : நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில் மது மற்றும் கள்ளச்சாராயம் உட்கொள்ளுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

மது மற்றும் கள்ளச்சாராயம் உட்கொள்ளுவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதனால், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நிதி ஆதாரம் இன்றி பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், கள்ளச்சாராயத்தை உட்கொள்ளுவது உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகின்றது.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பில், உதகை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இந்த பேரணி உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் பகுதியைச் சென்றடைந்தது. இப்பேரணியில் 100 -க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் கைகளில் மது மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் பேரணியாக சென்றனர்.