காகித கப்புகளை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் : கோவை கிளை தமிழக - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் மனு

கோவை : பிளாஸ்டிக் கப்பிற்கு மாற்றாகக் காகித கப்புகளை உபயோகிக்க அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : பிளாஸ்டிக் கப்பிற்கு மாற்றாகக் காகித கப்புகளை உபயோகிக்க அரசு உத்தரவிட வேண்டும் என தமிழக - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள். இதையடுத்து, கோவை மாவட்ட கிளையை சார்ந்த தமிழ்நாடு - புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 45 தொழிற்கூடங்களில் இந்தத் தொழில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அவை யாவும் இந்த உற்பத்தியில் அடங்கியுள்ளது. தற்போது அவ்வாறு தடை செய்யப்பட்ட பேப்பர் கப்பில் 6% மட்டுமே குறைந்த அடர்த்திக் கொண்ட பாலி எத்திலினை பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இதனிடையே, அதனை 4% குறைக்க அரசு கேட்டு கொண்டதிற்கு ஏற்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் இறுதி அறிக்கை வடிவம் பெற்ற பின்னர் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகப் பல இடங்களில் பேப்பர் பொருட்கள் பயன்பாட்டில் அதிகம் உள்ளது. அரசு இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும், மாவட்ட தொழில்மையம் மூலம் கடன் பெற்று தொழில் தொடக்க நிலையில் அரசு ஆணையை ஏற்று, 14 வகையான பேப்பர் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாகக் கூறியவர்கள் அரசின் மறு ஆணை வரும் வரை வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனை நிலுவையில் வைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...