மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்புகள் விற்பனைக்கு அரசின் உதவிகோரி விண்ணப்பிக்கலாம்

கோவை : கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகளிர் சுய உதவிக் குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகு சாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்குரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்தப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விற்பனை கண்காட்சிகளுக்கு பொருட்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ள கோவை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள பெண்கள் மகளிர் திட்டம் அலுவலகம், பழைய கட்டிடம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை என்ற முகவரியிலோ அல்லது 0422-2301855 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...