குன்னூர் சிம்ஸ் பூங்காவில் முதல்முறையாக பச்சை ரோஜா செடி நடவு

நீலகிரி : கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில் முதல்முறையாக பச்சை ரோஜா செடியை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


நீலகிரி : கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில் முதல்முறையாக பச்சை ரோஜா செடியை நடவு செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 



நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, ஆண்டுதோறும் புதிய ரக மலர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த சீசனுக்கு சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜாவை விளைவிக்கும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 



இது குறித்து அதிகாரிகள் கூறும்போது :- கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 50 பதியன் நாற்றுக்கள் உதகையில் இருந்து எடுத்து வரப்பட்டு, நர்சரியில் புதியரகம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றில் பச்சை ரோஜா பூத்துள்ளது. மற்றவையும் தயார் நிலையில் உள்ளன. வரும் பிப்ரவரி மாதம் இவற்றை பூங்காவில் நடவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படும், என்றனர். 



உதகையில் ரோஜா பூங்கா நுழைவாயிலில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த பச்சை ரோஜா செடி, தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் பூக்கும் மலர்கள், சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது. இந்த வரிசையில், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் முதல்முறையாக பச்சை ரோஜா வரும் மே மாதம் நடைபெறவுள்ள கோடை சீசனில் இடம்பெறவுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...