மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

கோவை : மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும், மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கவும், மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மனிதனுக்கு தீமைகளை ஏற்படுத்தி, பல வருடங்களானாலும் மண்ணில் மக்காது இருக்கும் நெகிழிப் பையின் (பிளாஸ்டிக் பை) பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



இந்த நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளேப்பாளையம் ஊராட்சி, காவல்துறை மற்றும் அம்பாள் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக துணிபைகளை பொதுமக்கள் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.



முன்னதாக, பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை அம்பாள் பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறுமுகை நகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் மற்றும் சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளின் வழியே சென்ற இந்தப் பேரணி சி.எஸ்.ஜ. தேவாலயம் முன்பு முடிவுற்றது. 

இந்தப் பேரணியின் போது, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்தப் பேரணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...