கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவச சேவை செய்த தனியார் கல்லூரி மாணவிகள்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க வந்த கல்லூரி மாணவிகளுக்கு மனுதாரர்கள் பாராட்டுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதி கொடுக்க வந்த கல்லூரி மாணவிகளுக்கு மனுதாரர்கள் பாராட்டுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்ப்பு நாளில், பல்வேறு பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க பொதுமக்கள் வருவது வழக்கமான ஒன்று. இதில், ஒரு சிலர் பேருக்கு மனு எழுத தெரியாமல், அங்கு வந்து எழுதி கொடுக்க சொல்லிக் கேட்டு காத்திருப்பார்கள். வெளியில் அமர்ந்துள்ள சிலர் மனுக்களை எழுதி கொடுத்து ஒரு சிறிய தொகையை மனு கொடுக்க வருபவர்களிடம் பெற்று கொள்வர். ஒரு சில நேரங்களில் பணம் இல்லாமலும், மனு எழுத முடியாமல் பரிதவிப்பர்.

இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் குறைதீர்ப்பு நாளில் பொதுமக்களுக்கு மனு எழுத மாணவர்கள் இலவசமாக உதவ வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, வாரந்தோறும் மாணவர்கள் பொதுமக்களுக்கு உதவி வந்த நிலையில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக மாணவர்கள் வருகை நின்றது.



தற்போது, கோவை சரவணம்பட்டி அருகே உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் மற்றும் எம்.காம் பயிலும் மாணவிகள் 10 பேர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாரர்களுக்கு இலவசமாக மனு எழுதிக் கொடுத்தனர். நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு, கல்லூரி மாணவர்கள் மீண்டும் பொதுமக்களுக்கு உதவ வந்துள்ளதால், மனுதாரர்கள் மாணவிகளை வெகுவாகப் பாராட்டினர்.

தொடர்ந்து, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மாணவர்கள் இவ்வாறு உதவினால் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி, அவர்ளை ஊக்குவித்தால் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனு அளிக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...