கோவை : புதிய அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக, பழைய திட்டத்தையே செயல்படுத்தக் கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- அத்திக்கடவு பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து அவிநாசி பகுதிக்கு கொடுக்கும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மாற்றி, கலிங்கராயன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுத்து வழங்கும் வகையில் திட்டத்தை தமிழக அரசு மாற்றியுள்ளது. பழைய திட்டத்திற்கு பதிலாக பயனற்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சிக்கிறது.
மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாய்க்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் தொகுதி பயன்பெற வேண்டுமென்பதற்காகவே இத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்ற பெயரில், அதற்கு தொடர்பே இல்லாத ஒரு திட்டத்தை மக்களை ஏமாற்றி செயல்படுத்த அரசு முயற்சிக்கிறது. எனவே, புதிய திட்டத்திற்கு பதிலாக பழைய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.