கோவை : வடகோவை சிந்தாமணி சிக்னல் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகரை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதற்கு முதலில் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கங்கா நர்சிங் மாணவர்களும், உயிர் அமைப்பினரும் இணைந்து சாலை விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் கோவை மாநகரின் முக்கிய சிக்னல்களில் நின்று, வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணியவேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், சிக்னல்களை மதித்து நடக்க வேண்டும், இப்படி சாலை விதிகளை மதித்து நடக்கும் பொழுது விபத்துகளைக் கண்டிப்பாக தடுக்கலாம் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ்களையும், இனிப்புகளையும் வழங்கினர்.
இந்த நிலையில், வடகோவை சிந்தாமணி சிக்னல் அருகே இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடக்க விழாவை, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித்குமார், சட்டம், ஒழுங்கு உதவி ஆணையாளர் வெங்கடேசன், போக்குவரத்து உதவி ஆணையாளர் ராஜ் கண்ணா, போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வானது விபத்துகள் அதிகமாக நடக்கும் பகுதிகளான சிந்தாமணி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம், சாய்பாபா கோவில் நிறுத்தம், கவுண்டம்பாளையம், வெள்ளக்கிணறு, துடியலூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, வரும் ஒன்பதாம் தேதி வரை தினமும் காலை 07;30 மணி முதல் 10 மணி வரையும், அதேபோல மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரையும் நடைபெறும்.